தமிழ் வளம் உறுப்பினராக!
படைப்புகளை சமர்ப்பிக்க!
படைப்புகள் சமர்ப்பிக்கும் முன்:
படைப்புகள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும்.
படைப்புகளின் காப்புரிமை (Copyright) முழுவதும் அதன் ஆசிரியருக்கே.
தமிழ் வளம் தளத்தின் வாசகர்களுக்காகவே பிரத்யேகமான எழுதப்படும் படைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தமிழ் வளம் இணைய தளத்தில் ஏற்கனவே இதே போன்ற படைப்பு இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
பிற இணைய தளங்கள், புத்தகங்கள், நாளிதழ் மற்றும் வார இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளைத் தவிருங்கள்.
மாறாக செய்திகள்/ நிகழ்வுகள் பற்றிய விமர்சனங்கள், உங்கள் படைப்புகளை அழகூட்டுவதற்காக பிற இணையதளங்களில் பகிர்வதற்கென்று கொடுக்கப்பட்டுள்ள படங்கள் (Pictures) / காணொளிகள் (Videos) ஆகியவை வரவேற்கப்படுகின்றன.
பிரச்சினைக்குரிய விஷயங்கள், பாலியல் தொடர்பான அருவருக்கத்தக்க தகவல்கள் ஆகியவற்றை சமர்ப்பிப்பதை தவிருங்கள்.
வெளியிணைப்புகள் கொடுக்கும் போது அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ளுங்கள்.
படைப்புகளை ஏற்கவோ, நிராகரிக்கவோ தமிழ் வளம் இணைய ஆசிரியர் குழுவுக்கு முழு உரிமை உண்டு.
படைப்புகளை சமர்ப்பிப்பது எப்படி?
ஏற்கனவே WordPress வலைப்பதிவு வைத்திருப்போருக்கு எளிதாக இருக்கும் என்றாலும் புதியவர்களுக்காக உதவும் குறிப்புகள்:
தமிழ் வளம் இணையதளத்தில் இலவசமாக உறுப்பினராகிக் கொள்ளுங்கள். (Register)
தமிழ் வளம் இணையத்தில் உங்கள் பயனர் பெயர் (User Name), கடவுச் சொல் (Password) கொண்டு Signin செய்து கொள்ளுங்கள்.
Posts >> Add New என்னும் இணைப்பை சொடுக்கி உங்களது புதிய படைப்புகளை சமர்ப்பிக்கலாம்.
எழுதப்போகும் தலைப்பை Title என்ற இடத்தில் நிரப்புங்கள்.
தமிழில் தட்டச்சு செய்ய NHM Writer என்னும் இலவச மென்பொருளை உபயோகிக்கலாம். Google Transliteration, Quillpad போன்ற எளிமையான இணையதளங்களையும் உபயோகித்துக் கொள்ளலாம்.
படைப்பு இடம் பெற தகுதியான பிரிவைத் தேர்ந்தெடுங்கள். ஒரு முதன்மைப் பிரிவு (Parent Category) மற்றும் ஒரு துணைப்பிரிவு (Sub Category) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
உங்களது படைப்பை Subject என்னும் இடத்தில் தட்டச்சு செய்திடவும். தேவைப்படின் தமிழ் வளம் இணையத்தில் ஏற்கனவே அமைந்த படைப்புகளின் இணைப்பு, உங்கள் படைப்புக்குப் பொருத்தமான படங்கள்/ காணொளிகள் , ஆகியவற்றையும் இணைத்திடலாம்.
தேடியந்திரங்களால் (Search Engines) உங்கள் படைப்புகள் கண்டறியப்பட உதவும் உங்கள் படைப்பு சார்ந்த குறிச்சொற்களை (Tags) பூர்த்தி செய்யுங்கள்.
உங்கள் படைப்பு தமிழ் வளம் இணையத்தில் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதனை முன்னோட்டம் (Preview) பார்த்து, மாற்றங்கள் இருப்பின் செய்து கொள்ளலாம்.
Submit for Review என்னும் பொத்தானை அழுத்தி உங்கள் படைப்பை சமர்ப்பிக்கலாம். படைப்பு ஆசிரியர் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பின் தமிழ் வளம் இணைய தளத்தில் வெளியிடப்படும்.
வாழ்த்துக்கள்!

